Wednesday 19 September 2012

Rathnavel Natarajan பின்னூட்டம்


Rathnavel Natarajan
8:22 AM (4 minutes ago)
to me
ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி ஒரு நண்பர் எழுதியிருக்கிறார்.  பள்ளிப் பருவத்தில் இங்கிருந்திருக்கிறார்.  எங்கள் ஊரை எப்படி ரசித்திருக்கிறார் பாருங்கள்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.  நன்றி திரு சுவாமிநாதன்.
நன்றி.  நூலகம் கதிரவன் கடை அருகே மாற்றப் பட்டிருக்கிறது.  யானை இருக்கிறது.  பழைய ஸ்டேட் பேங்க் கட்டிடத்தில் இருக்கிறது.  அது முதலில் யானை லாயமாக இருந்தது.  பின்பு பேங்க் வந்தது.  

பின் குறிப்பு- நான் இணையதளத்தில் வேறு தளங்களில் தேடல்களைச் செய்யும்போதும்  திரு ரத்னவேல் நடராஜன் அவர்களின் பல பின்னூட்டங்களை பார்ப்பேன். சிறப்பாக இருக்கும்.திருவில்லிபுத்தூர் மீது அவருக்கு உள்ள ஈர்ப்பு எனக்கு பொறாமையை தரும். 

ருசி குறையாத புளிய மரத்தடி கடை அல்வா ...




2012 செப்டம்பர் 12 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ...
ஒரு திருமணத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லவேண்டும் என்று முடிவு எடுத்தவுடனேயே இனம் புரியாத பரவசம் தொற்றிக் கொண்டது. ஊரைவிட்டு வந்து 36 ஆண்டுகள் ஆன பின்னரும் நினைவுகள் இழுக்கின்றன. 

காலையில் பொதிகையில் போய் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேசனில் இறங்கிய போது
பெரிய வித்தியாசம் எதையும் உணரவில்லை. கொஞ்சம் கூடுதலாக மேற்கூரை, உட்காருவதற்கு இடங்கள் என்பதை தவிர. ஆட்டோவில் போகும்போது வீடுகள் கொஞ்சம் அதிகமாகி இருப்பது தெரிந்தது.திருப்பாற்கடலில் சொட்டுத் தண்ணீர் இல்லை. 1976 ல் ஆண்டாள் தியேட்டர் கிடையாது. ஆனால் அதற்கு அருகில் உள்ள ரைஸ் மில் இப்போதும் இருக்கிறது. மடவார் வளாகம் சென்றேன். சிவன் கோயிலுக்கு எதிரே உள்ள குளம் செம்மை செய்யப்பட்டிருப்பது பார்த்தபோது மகிழ்ச்சியாய் இருந்தது. அப்படியே நடந்து 
மேல ரதவீதி வந்தபோது அச் சந்திப்பில் ஓர் வாடகை நூலகம் இருந்தது ஞாபகம் வந்தது.மஞ்சள் பூ மர்மம் போன்ற படக் கதைகளை ஒரு நாள் வாடகை ஐந்து பைசாவிற்கு  வாங்கிப் படித்திருக்கிறேன். மேலரதவீதி சந்து வழியாக மேலமாட வீதி வந்தபோது அங்கிருந்த இந்து நடுநிலைப்பள்ளி - அப்போது ஐந்தாம் வகுப்பு மட்டும் அங்கிருந்தது- இல்லாதது ஏமாற்றத்தை தந்தது. அதன் ஒருபகுதி இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் எழும்பிக் கொண்டிருக்கிறது. மேலமாடவீதி வழியாக ஆண்டாள் கோயிலுக்குள் நுழைந்தபோது யானை 
லாயம் காலியாக இருந்தது. யானை இல்லாத கோயில் வெறிச்சென்று. கோயில் வளாகக்கடைகளில் ல் கட்டிடம் என்பதால் அதே குளுமை. 1970 களின் ஆரம்பத்தில் துவக்கப்பட்ட சர்வோதய கடையில் நாக்கை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் நாய் பொம்மை இருக்கா என்று தேடினேன்.அதுதான் அக்கடை ஆரம்பித்த போது கடையின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும். கோயிலில் கூட்டம் இல்லை. ஒரு வழிகாட்டி கோயில் பெருமைகளை கூறினார். பெரும்பாலும் புதிதாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் கேட்க சுவாரஸ்யமாக 
இருந்தது. பின்னர் வடபத்திர சயனர், ஆண்டாள் பிறந்த துளசி மாடம் பார்த்துவிட்டு எதிரே உள்ள கல்யாண மண்டபத்தில் ஊருக்கு வந்த நோக்கத்தையும் முடித்தேன். சன்னதி தெருவில் இருந்த நூலகம் அங்கு இல்லை.அங்கே இருந்த ஒருவரிடம் கேட்டேன். சத்தியம் செய்தார். நூலகம் அங்கே இருந்ததே இல்லையென்று. நான் வாதாடவில்லை. வாசலில் விற்ற கொய்யாபழத்தை வாங்கிவிட்டு நகர்ந்தேன். அரங்க நாதர் சன்னதி தெருவில் 
முட்புதற்குள் இருந்த அரங்கநாதருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. சக்கரக் குளம் பாழடைந்து விட்டது.பழைய முனிசிபல் ஆபிஸ் இடிக்கப்பட்டுவிட்டது. புதுதெருவின் ஆரம்பத்தில் இருந்த டென்னிஸ் மைதானம் காணோம். 

36 ஆண்டு முந்தைய உறவுகள் சிலவற்றை சந்தித்தது நெகிழ்வான அனுபவம். எனது நண்பர்கள் டாக்டர் ஸ்ரீநிவாசன்,ராதாசங்கர் (கதிரவன் ஓட்டல்) மதன்சிங் ( புளிய மரத்தடி லாலா கடை) ஆகியோரை சந்தித்தேன். புளிய மரத்தடி கடை அல்வா இப்போதும் ருசி குறையாமல் இருக்கிறது.