இவர் திருவில்லிபுத்தூரின் நகர்மன்றத் தலைவராக மிகக் குறுகிய காலம் இருந்தார். அவருக்கு முன்னாள் காங்கிரஸ்தான் அப்பதவியில் நீண்ட காலம் இருந்து வந்திருந்தது.திரு பாலையா (அவரது பதிவேட்டு பெயர் வேறு என நினைக்கிறேன்) என்பவர் 18 ஆண்டுகளாக நகர்மன்றத் தலைவர் ஆக இருந்தார்.அவரும் மக்களிடம் மதிப்பைப் பெற்றவராகவே இருந்தார்.
பின்னர் தி மு க வின் சார்பில் சேர்மன் ஆக வந்தவர்தான் மா குருசாமி. குறுகிய காலத்தில் மக்களின் பேரன்பைப் பெற்றவராக திகழ்ந்தார். அவர் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக மறைந்து விட்டார். அன்னாரை இன்றைக்கு எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியாது. அவரின் சமாதி சிவகாசி ரோட்டில் இருக்கிறது.
பேரறிஞர் அண்ணா முதல்வராக கொஞ்ச காலம்தான் இருந்தார். இவரும் அப்படிதான். திருவில்லிபுத்தூர் நகரம் அவரை சின்ன அண்ணா என்று அழைத்தது.
Showing posts with label swaminathan. Show all posts
Showing posts with label swaminathan. Show all posts
Saturday, 6 November 2010
Thursday, 4 November 2010
அப்பாவின் மூன்று நண்பர்கள்
அப்பாவின் மூன்று நண்பர்களை மறக்க இயலாது. அவர்களில் ஒருவர் மறைந்து விட்டார்.
மறைந்தவர் பெயர் திரு வெங்கடாசலம். குண்டாக இருப்பார். எங்கள் வீட்டு உள்திண்ணையில் அவர், திரு முத்தையா . எங்கள் அப்பா மூவரும் அமர்ந்து மணிக் கணக்காகப் பேசுவார்கள். வெங்கடாசலம் நகைச் சுவையாகப் பேசுவார். அவர் வரும்போது அவரின் வளர்ப்பு நாய் 'ப்ளாக்கி' கூடவே வரும். அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி ஒன்று உண்டு. ஒரு முறை நண்பர்களோடு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்தார். நண்பர்களெல்லாம் பக்தியோடு போகிறவர்கள்.இவர் நட்புக்காக போனவர். அங்கு போய் அவர்கள் நடக்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து இவரால் நடக்க முடியவில்லை. அவர்களெல்லாம் சுவாமியே அய்யப்போ ! என்று சொல்லி நடக்க நடக்க இவர் தனது பெரிய சரீரத்தை தூக்கிக்கொண்டு ' சுவாமியே பையப்போ !' என்று பதில் கோஷத்தோடு பின்னாலே போவாராம். அந்த அய்யப்போவுக்கு ஈடாக பையப்போ(மெல்ல நட ) என்று ரய்மோடு சொன்னதை சுவையோடு சொல்வார். ஒரு அதிகாலையில் நெஞ்சு வலி வந்து இறந்து விட்டார். அவர் மகள் தற்போது சென்னை எல் ஐ சி யில் பணி புரிகிறார்.
திரு முத்தையா அவர்கள் சைக்கிளில் தினமும் வருவார். அவர் எங்கள் வீட்டு உடைமையாளரிடம் கணக்கு வேலை பார்த்து வந்தவர். அவர் சைக்கிளை நிறுத்தியவுடன் நிற்கிற இடத்திலேயே பெடல் போடுவேன். அவரது குடும்பமே எங்களுக்கு நெருக்கமானது. திரு நடராஜன், ராஜேஸ்வரி, மேடையாண்டி ஆகியோர் பெயர்கள் நினைவில் உள்ளது. அவரின் அம்மா பெரிய பாம்படம் போட்டிருப்பார்கள். இவரின் அசாத்திய பொறுமையும், நிதானமும் என்னை வியக்க வைக்கும்.
திரு கிருஷ்ண சிங் பேருந்து நிலையத்திற்கு அருகில் லாலாக் கடை வைத்திருந்தார். அவர் கடை அல்வாவுக்கு நிறைய மவுசு உண்டு. அவர் வீடு சன்னதித் தெருவின் முதல் வீடு ஆகும். அவர் வீட்டிற்கு அல்வா ரெடி ஆகிற நேரத்திற்கு போனால் சூடாக கை நிறைய அல்வா கிடைக்கும். பால் கோவாவும் டேஸ்டாக இருக்கும். அவரின் மகள் சாந்தி எனது மூத்த சகோதரியின் பள்ளித் தோழி. மகன் மதன் என்னோடு படித்தவன். சுந்தர் சிங், அம்சாஎன்ற மகன், மகளும் நினைவில் இருக்கிறார்கள். இரவு அவரின் கடையில் அப்பாவின் நண்பர்கள் டேரா அடித்துவிட்டு வீடுகளுக்குத் திரும்ப நடுநிசியைத் தாண்டி விடும்.

வெங்கடேஸ்வரா தியேட்டர்
டிவி என்ன , ரேடியோ கூட வீட்டில் இல்லாத காலத்தில் சினிமா தியேட்டர் மட்டுமே மக்களுக்கு பொழுதுபோக்கு. திருவில்லிபுத்தூரில் முதல் தியேட்டர் கணபதி ஆகும். மதுரை ரோட்டில் இருந்தது அது. எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்தது வெங்கடேஸ்வரா. திருவண்ணாமலை போகிற வழியில் 1970 களுக்கு பிறகு வந்த தியேட்டர் ஜெயகிருஷ்ணா ஆகும்.
புதிய ஜெயகிருஷ்ணா தியேட்டரில் பார்த்த படங்கள் குறைவு. நாளை நமதே என்ற எம் ஜி ஆர் படம் ஒன்று. நான் பார்த்த முதல் ஆங்கிலப் படம் - சில்வர்ஸ்டர் ஸ்டால்லோன் நடித்தது. பெயர் இப்போது நினைவில் இல்லை.
கணபதி தியேட்டரில் கூடுதலாக படம் பார்த்திருந்தாலும் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. ஆனால் எமர்ஜென்சி காலத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாதல்லவா! பிந்தைய காலத்தில் அரங்கத்திற்குள் கூட்டங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் கணபதி தியேட்டரில் அ தி மு க ஒரு கூட்டத்தை நடத்தியது. நான் அக் கூட்டத்திற்கு போயிருந்தேன். எமெர்ஜென்சி அமலாக்கப்பட்டபோது எனக்கு வயது 12 வயதுதான். ஒரு நாள் மாலை ஸ்கூல் கிரௌண்ட் போய் விட்டு வந்தபோது ஜோதி ஸ்டுடியோ அருகில்தான் ஒரு கடையில் தொங்கிய தலைப்பு செய்திகளில் அவசரநிலைப் பிரகடனம்-தலைவர்கள் கைது என்பதைப் பார்த்தேன். தி மு க வைச் சார்ந்த ச. அமுதன் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. அன்றைக்கு ஜனதா சாப்பாடு ரூ 1 க்கு ஓட்டல்களில் போட்டதை அரசு ஆதரவாளர்கள் சிலாகித்துப் பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. பேச்சு சுதந்திரம் பறிக்கப் பட்டதன் சாட்சியமாக கணபதி தியேட்டர் பதிவாகி உள்ளது.
வெங்கடேஸ்வராதான் நிறைய படங்கள் பார்த்த தியேட்டர். தரை டிக்கெட் 25 பைசாவாகவும் பின்னர் 35 பைசாவாகவும் இருந்தது.நான் தனியாக போய் பார்த்த படம் இருளும் ஒளியும். படம் பார்க்க கொடுத்த காசை மூணு சீட்டு விளையாட்டில் கோட்டை விட்டு தியேட்டர் வாசலிலேயே நின்று வசனத்தைக் கேட்டுவிட்டு வந்த படம் குறத்தி மகன். ஸ்கூலில் அழைத்துப் போன படம் மீனாவின் கடிதம். விடுமுறையில் சந்தித்துப் பிரிந்த ஒரு சிறுமி தனது நண்பனுக்கு அனுப்புகிற கடிதம் கங்கை ஆற்றில் மிதந்து போய்ச் சேர்ந்து விடுகிற கதை சுவாரஸ்யமானது. அந்தப் படத்திற்கு போனபோது ட்ரைலராக இதயக் கனி படத்தின் முதல் பாடல் "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற , நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" காண்பிக்கப் பட்டது.
உரிமைக் குரல் அங்கேதான் பரபரப்பாக ஓடியது. கலைஞர் ஒரு முறை மேல ரத வீதி - வடக்கு ரத வீதி சந்திப்பில் பேசினார். அவர் வருகிற நாள் எம் ஜி ஆர் படம் ஓடக்கூடாது என்பதற்காக அன்று படம் மாற்றப்பட்டு கலைஞரின் மகன் மு க முத்து நடித்த இங்கேயும் மனிதர்கள் படம் போடப்பட்டது.
தியேட்டர் கியூவில் மூன்று வரிசைகள் இருக்கும். தியேட்டரில் பெல் அடித்தவுடன் வெளிக் கதவை திறப்பார்கள். சுவர் ஏறி குதித்து ஓடுவோம்.
எம் ஜி ஆர் முதலில் வரும்போது வரவேற்பதற்காக நிறைய காகிதச் சுருள்களை பறக்க விடுபவர்களில் நானும் ஒருவன். அப்பாவுடன் போனால் மட்டுமே ரூ 1 டிக்கெட் வாங்கி பால்கனி போகிற வாய்ப்பு கிடைக்கும்.

நீராவி ஸ்கூல்
நான் முதல் வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம் இது.
திரு செல்வராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். திருமதி முனிநாயகம்
என்பவரே எனது முதல் ஆசிரியர். அய்ந்தாம் வகுப்பு வரையிலேயே இருந்த அப் பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே ஆள் உயர மரத் தடுப்பே இருக்கும். திரு ரத்தினம் என்ற ஆசிரியர் மூன்றாவது வகுப்பு எடுத்தார். மற்ற ஆசிரியர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. நம்பி நாயுடு தெருவிலிருந்து ஒரு ஆசிரியை வருவார்.
இப் பள்ளி போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்தாலும் எங்கள் வீட்டிற்க்கு நேர் பின்புறம் இருந்தது. காம்பவுண்ட் சுவரில் ஏறிப் பார்த்தால் ஸ்கூல் தெரியும். வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இன்ஸ்பெக்சன் போது பள்ளிக்கூடமே
பர பரத்து போகும். நிறைய சார்ட்டுகள் வகுப்புகளின் மரத்தடுப்புகளில் தொங்கும்.
1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது பள்ளி மாணவர் பேரணி நடத்தினார்கள். ஊர் முழுக்கச் சுற்றினோம். " இந்திய நாட்டின் எழில் பாராய்! இமயம் வென்ற கதை கேளாய்! சொந்த நாட்டின் துயர் துடைக்க- சூளுரை ஏற்றாள் நம் அன்னை!" என்ற பாடலை ஒரு பெண்மணி பாட நாங்களெல்லாம் பின் பாட்டு பாடினோம். இப்பாடல் "நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய்" என்ற புகழ் பெற்ற பாட்டின் மெட்டில் அமைக்கபட்டிருந்தது. இப் பாடலின் அடுத்த பாரா வரிகளும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று சிலர் குறுகிய அரசியலுக்காக "JINGOISM" ஐ பயன்படுத்துவதால் அவ் வரிகளைத் தவிர்த்திருக்கிறேன். அன்றைக்கு யாஹ்யாஹான் போரில் சரணாகதி என்று அறிவித்தவுடன் எனக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. பல ஆண்டுகளுக்கு "இந்திய நாட்டின் எழில் பாராய் " பாட்டு மனதில் நின்று விட்டது.
நீராவி ஸ்கூலின் தாளாளர் வயதானவர். குடையோடு நடந்தே வருவார். ஒரு முறை அவரின் வெள்ளைச் சட்டையில் ஏப்ரல் 1 அன்று பின்னால் போய் மையை அடித்துவிட்டு முன்னால் போய் வணக்கம் சொன்னோம். அவரோ " உங்க அப்பா பேனாவை தொலைத்து விடாதே" என்று சொல்லிவிட்டு நகர்ந்தவுடன் அசடு வழிந்தோம்.
அப்போதெல்லாம் வீடுகளில் மாவுக் குச்சி வாங்கித் தர மாட்டார்கள். வேறு ஒன்றுமில்லை. நாங்கள் மென்று தின்று விடுவோம்.

Tuesday, 2 November 2010
சக்கரக் குளம்
நான்கு பக்கமும் படித்துறையுடன் அழகாக இருந்த குளம். தண்ணீர் நிரம்பிப்
பார்த்த சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது. ஒரு பக்க படித்துறை பழைய முனிசிபல்
அலுவலகக் கட்டிடத்தை ஒட்டி இருந்ததால் அதை யாரும் பயன்படுத்த
மாட்டார்கள். மேற்குப் பக்கப் படித்துறையும் மண் மேவி மூடப்பட்டுவிட்டது.
திருவில்லிப்புத்தூருக்குள் பெரிய விளையாட்டு மைதானங்கள் கிடையாது.
நகரின் மையத்திலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம்
கூட ஊருக்கு வெளியே சி எம் எஸ் பள்ளிக்கூடத்தின் அருகே இருந்தது.(இப்பவும்
அங்கேதானா?) எனவே தண்ணியில்லா சக்கரக்குளம் கிரிக்கெட், ஹாக்கி விளையாடுகிறமைதானமாக மாறிவிட்டது. ஹாக்கி ஸ்டிக் வாங்க வசதி இல்லாததால் அதைப் போல வளைந்த விறகுக் கட்டைகளை வைத்து விளையாடுவார்கள். கிரிக்கெட்டுக்கும் ஸ்டம்ப்ஸ்க்கு ஒல்லியான விறகுக் கட்டைகளைத்தான் நட்டு வைப்பார்கள். சக்கரக் குளத்திற்கு கிழக்குப் பக்கம் முக்கு வீட்டு ரகு என்பவர் நலல கிரிக்கெட் பிளேயர். என்னுடைய அண்ணன் நலல ஹாக்கி பிளேயர். அவர் சி எம் எஸ் ஸ்கூலில்
அந்த ஸ்கூல் டீமில் இருந்தவர். நானும் ஓரளவு கிரிக்கெட்
விளையாடுவேன். சக்கரக் குளத்தின் நடுவில் பெரிய சதுரமான மேடு ஒன்று
இருக்கும். அதற்கு மேலே உட்கார்ந்து விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.
பிறகு இரண்டு ஆண்டுகள் அது பால் பாட்மிட்டன் மைதானமாக மாறியது.
மின்சார வாரியத்தில் பணி புரிந்த திரு லெட்சுமணன் அருமையாக விளையாடுவார்.அவர் அடர்த்தியான மீசை வைத்திருப்பார். ஆண்டாள் கோவிலுக்குள் ஸ்வீட் ஸ்டால் வைத்திருந்த லாலாவும் நல்லா விளையாடுபவர். ராஜா ராம் என்ற ப்ளேயரும் நினைவில் நிற்பவர். அங்கு ஒரு மாநில அளவிலான போட்டி நடைபெற்றது.இறுதிப் போட்டியில் கடைசி பாலில் ராஜாராம் ஜோடியின் தலைவிதியே மாறி தோற்று விட்டார்கள். டபுள்ஸ் மட்டுமின்றி பைவ்ஸ் விளையாடுவதையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
சக்கரக்குளத்திற்கு வடக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மதுரை அழகர் நகரில் பின்னர் குடியிருந்தார். சினிமா விட்டால் வெங்கடேஸ்வரா தியேட்டரில் இருந்து மக்கள் இந்த வழியாகத்தான் அதிகமாக வருவார்கள்.
சக்கரக் குளத்தின் மேற்கு-வடக்கு முனையில்தான் போஸ்ட் ஆபீஸ் இருக்கும்.
வடக்கு படித்துறை எதிர் வீட்டில் ரெங்கசாமி என்பவர் வீடு இருந்த ஞாபகம் உள்ளது.வடக்குப் பக்கத் தெரு வழியாக நேரே சென்றால் வருகிற தெரு நம்பி நாயுடு தெரு ஆகும். அத்தெருவின் முனையில் உள்ள கடைக்கு சென்றுதான் காலையில் சட்டினிக்கு தேங்காய்ச் சில்லு வாங்குவேன். ஐந்து பைசாவுக்கு சின்ன சின்னதாய் ஐந்து சில்லு கிடைக்கும்.
சிவகிரி அரண்மனைக்கு பக்கத்தில் இந்தக் குளம் இருப்பதால் அந்தக் காலத்தில்
படை வீரர்கள் இங்கேதான் குளித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.
Monday, 1 November 2010
தேரடித் திடல்
![]() திருவில்லிபுத்தூரின் அரசியல் பள்ளிக்கூடம் என்று தேரடித் திடலைச் சொல்லலாம்.எத்தனையோ பொதுக் கூட்டங்கள் இங்கு நடைபெற்றன.அப்போதெல்லாம் இப்போதைய பெற்றோர் போல படி..படி.. என்று பிள்ளைகளை உயிரை வாங்குகிற டார்ச்சர் எனக்குஇருந்ததில்லை.மாணவப் பருவத்தை நன்றாக ரசித்தேன் எனலாம்.இரவுப் பொதுக்கூட்டம் என்றால் மாலை 6 மணிக்கெல்லாம் மைக் செட்டுக்காரர் பாட்டைப் போட்டு அமர்க்களப்படுத்தஆரம்பித்து விடுவார். வாண்டுகளெல்லாம் கூட்டம் ஆரம்பிக்கும்வரை போடுகிற கும்மாளத்திற்கு குறைவு இருக்காது.தேரடிக்கு எதிரே ஒரு விறகுக் கடை உண்டு. பக்கத்தில் ஒரு டீக் கடை உண்டு. அப்போதெல்லாம் கருப்பட்டி காபி கிடைக்கும். தேருக்கு வலது பக்கம் இருந்த பெரிய காலி இடத்தில் சர்க்கஸ், மிருகக் காட்சி ஆகியன ஏற்பாடு ஆவதுண்டு. தந்தை பெரியார் பேசுவதை இரண்டு தடவை கேட்டிருக்கிறேன். கோடையில் ஆண்டாள் நீராவிப்பள்ளியில் உள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து 10 நாள் தங்குகிற வைபவம் உண்டு. அந்த காலம் பார்த்தே திராவிடர் கழகம் இக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது வழக்கம். தேரில் இருந்து மின் வாரிய அலுவலகம் வரை கூட்டம் நிரம்பி வழியும். சன்னதி தெரு பட்டர்கள் ரொம்ப தீட்டு பார்ப்பார்கள்.சாமி எங்கள் தெரு வழியாக செல்லும் போது தீர்த்தம் வாங்கச் சென்றால் மேலே கை பட்டுவிடக்கூடாது என்று பட்டர்கள் சீறி விழுவார்கள். சேட்டைக்கார பையன்கள் வேண்டுமென்றே இடித்து விட்டு ஓடி வந்துவிடுவார்கள். சன்னதி தெருவில் தப்பித் தவறி வசித்த ஒரு சில BC களுக்கு தீண்டாமை அனுபவம் 1970 களில் ஆழமான காயங்களாக இருந்தன. பெரியாரின் பேச்சுக்கள் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின. ராஜாஜி பேசியும் கேட்டிருக்கிறேன். அவருக்கு கூட்டம் அதிகம் இருக்கவில்லை. சுதந்திராக் கட்சி அப்போது சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி போடுகிற அளவிற்கு வளர்ச்சியோடு இருந்தது. அ.தி.மு.க பிறந்த பிறகுதான் மேடைப் பேச்சுக்களில் அனல்பறக்க ஆரம்பித்தது. 1971 தேர்தலில் எம் ஜி ஆர், தி மு க வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது இரவு 10 மணிக்கு வருவார் என்றுதேரடித் திடல் அருகே காத்திருந்தது நினைவில் உள்ளது. கீழ ரத வீதி முழுவதும் கூட்டம் அலை மோதியது, 10 மணி..11 .. !2 .. என்று நேரம் ஓடியது, எம் ஜி ஆர் வருகை தாமதம் ஆகிக் கொண்டே போனது. ஆனால் கூட்டம் கலையவே இல்லை. எங்கள் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தோம். அதிகாலை 4 மணிக்கு எம் ஜி ஆர் வந்தார், அவரின் வேனில் பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் முதல் முதலாக அவரைப் பார்த்தேன்.அதில் இருந்து 10 ஆண்டுகள் அவரின் தீவிர ரசிகனாக இருந்தேன். எம் ஜி ஆர் முதல்வர் ஆன பிறகு அவர் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது CPM தோழர் ஆர் உமாநாத் ஆற்றிய உரை சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது. அந்த உரையை படித்த போதுதான் எம் ஜி ஆர் மீதான தனி நபர் வழிபாட்டில் முதல் கீறல் என் மனக் கண்ணாடியில் விழுந்தது.மீண்டும் தேரடித்திடலுககே வருகிறேன். எம் ஜி ஆரின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி ஒரு முறை தேரடித் திடலில் பேசினார். எனக்கு ஒரு கேள்வி அன்றிலிருந்து இன்று வரை மனதில் உள்ளது. திருவில்லிபுத்தூர் எம் ஜி ஆரின் கோட்டை. ஆனால் தனிக் கட்சி ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த ஊருக்கு அவர் வருகை தரவில்லை. ஏன்? இந்த நேரத்தில்தான் சக்ரபாணியின் வருகைநிகழ்ந்தது.எனவே எம் ஜி ஆரை பார்க்க வேண்டுமென்ற ஏக்கத்திற்கு வடிகால் போல எக்கச்சக்கமான கூட்டம். நான் அக்கூட்டத்தில் முன் வரிசையில் தரையில் அமர்ந்திருந்தேன். சைதை தமிழ்ச்செல்வன் என்பவரின் பலகுரல் பேச்சு சிறப்பாக இருக்கும். தி மு க வின் மணி-சாமி குழுவினரின் கலை நிகழ்ச்சி மக்களை ஈர்க்கும். போலீஸ் கண்ணன், மாடி லட்சுமி போன்றோரின் கூட்டங்களுக்கு மக்கள் அதிகமாக வருவார்கள். அந்த ஊரில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் அப்போது பலமாக இருந்தது. க.சுப்பு , சக்தி கோதண்டம்போன்றவர்கள் பிரபலமான தலைவர்களாக இருந்தனர். விலைவாசி, தொழிலாளி என்று அவர்கள் பேசுவார்கள்.சுரத்தே இல்லாமல் கேட்டிருக்கிறேன். தேரடித் திடலில் பெரிய தேரின் வடம் சுருட்டி சுருட்டிப் போடப்பட்டிருக்கும். அதற்குள் உள்ள வட்டத்திற்குள் படுத்துக் கொள்வது சுகமாக இருக்கும். பொதுக் கூட்டம் முடிந்து நான் வீட்டுக்கு வராததால் அம்மா தேடி வந்து மைக் செட்டுக் காரரிடம் விசாரித்து பின்னர் வடத்தின் வட்டத்திற்குள் இருந்து எழுப்பி அழைத்துப் போன நிகழ்ச்சியும் உண்டு. |
Saturday, 30 October 2010
அரங்கநாதர் சன்னதி தெரு , ஸ்ரீவில்லிபுத்தூர்
தெருவின் நடுவில் நின்று மேற்கே திரும்பிப் பார்த்தால் ஆண்டாள் கோயில் தெரியும்.சின்ன வீதிதான்.ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள சன்னதித் தெருவின் நீட்சிதான் இந்தத் தெரு. குறுக்கே கீழ ரத வீதி இருக்கும்.
எங்கள் வீட்டின் இலக்கம் 3 ஆகும். மொத்தமே 10 வீடுகள்தான்.
ஒன்னாம் நம்பர் வீடுதான் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த திரு ரா கிருஷ்ணசாமி அவர்களின்வீடு. இவர் சாத்தூரின் எம் எல் ஏ ஆகவும் இருந்திருக்கிறார். அவர் வீட்டிலும், எதிரே இருந்த அவரது உறவினர் திரு நா.கி வீட்டிலும் மட்டுமே டெலிபோன் உண்டு. பெரிய கறுப்புக் கலர் கருவியில் லோக்கல் கால் பேசுவதற்கே எக்ஸ்சேஞ்ச்மூலமே லிங்க் கிடைக்கிற காலம. அவசரத்திற்கு இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.அந்த ஊரில்
கூட்டத்திற்கு பேச வருகிற காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் அவர் வீட்டுக்கு மரியாதைக்காகவும்,இரவு உணவிற்காகவும் வருவார்கள். ஒருமுறை நடிகர் பிரேம் ஆனந்த் (சிவாஜி படங்களில் 70 களில் நடித்தவர்) வந்தபோது தெருவே போய் வேடிக்கை பார்த்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது
அவரது வீடு தி மு க வினரால் கல்லெறிக்குள்ளானது. அவரது வீட்டில் இருந்த திரு மூக்கய்யா என்ற பணியாளரை எங்கள் வீட்டில் வைத்துதான் எங்கள் அப்பா பாதுகாத்தார். எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த
வேனற்பந்தலை அக்கும்பல் எட்டி உதைத்து உலுக்கியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது திருவில்லிபுத்தூரில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த திரு ராமசந்திரன் நடுநிலையாக இருந்து அப்பிரச்சினையை
சமாளித்ததாக பரவலான பாராட்டு இருந்தது. திரு ரா.கி அவர்கள் அப்போது தனியாக வீடு பார்த்துக் குடி போயிருந்தார். அந்த வீட்டிற்கு கலவரக் கும்பல் போன போது அவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பினார் என்று மறுநாள் பரபரப்பான பேச்சு ஊருக்குள் இருந்தது. இந்தப் பெரியவர் ராவன்னா கீனாவின் பெயர் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் டிரஸ்ட்டிகளின் பட்டியலில் இருந்ததை நான் 2001 ல் அங்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டிற்கு சென்ற போது பார்த்தேன். இவரது பேத்தி பிரேமா அவர்களின் கணவர் திரு வரதராஜுலு பிந்தைய காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தார். நான் பக்கத்தில் இருந்து பார்த்த முதல் அரசியல்வாதி ரா கி தான். எளிமையானவர். யாரும் எப்போதும் சந்திக்க முடியும்.
இரண்டாம் நம்பர் வீட்டு பெரியவர்களை நாங்கள் பெரியப்பா, பெரியம்மா என்றுதான் அழைப்போம்.ஆனால் உறவினர்கள் அலல. அவர்கள் வீட்டில் சண்முகம்,.லட்சுமி,கோமதி என்ற சகோதரிகளும், துரை, சந்திரன், மாரியப்பன் ஆகியோரும் உண்டு. திரு சந்திரன் அவர்களை மட்டும் 30 வருடம் கழித்து 2006 ல் மதுரையில் சந்தித்தேன். அப்போதெல்லாம் திருவில்லிபுத்தூரில் கல்லூரிகள் கிடையாது. சிவகாசிக்கு போகவேண்டும். பாலிடெக்னிக் என்றால் ராஜபாளையம் போக வேண்டும். சந்திரன் சைக்கிளில் தினமும் 10 கி மீ சென்று பாலிடெக்னிக்கில் படித்தார்.அந்தப் பெரியப்பாவின் பேரன்தான் பின்னர் சாத்தூரில் எல் ஐ சி பணிக்கு வந்த திரு நமசிவாயம். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்படிச் சில சந்திப்புகளும் அரிதாக நிகழ்கின்றன.
மூன்றாம் நம்பர் வீடுதான் எங்கள் வீடு. அந்த தெருவில் இருந்த ஒரே ஓட்டு வீடு அதுதான். மின் விசிறி கிடையாது.வெயில் காலத்தில் நீர்க் கடுப்பால் பல நாள் இரவு தவித்திருக்கிறேன்.எடுப்புக் கக்கூசுதான். ( அன்றைக்கு எங்களது கஷ்டம் மட்டும்தான் புரிந்திருந்தது. அருந்ததியனின் வலி தெரியாத அடி முட்டாள்த் தனத்திற்காக இன்றைக்கு வருந்துகிறேன் ). எதிரே மின் விளக்கு வராத வரை எங்கள் வீட்டிற்க்கு எதிர்ப் பகுதியே பொதுக் கழிப்பறையாக பயன்பட்டது. அப்போது தண்ணீர்க் கஷ்டம் ரொம்ப இருந்ததால் வீட்டிற்குள் முனிசிபல் தண்ணீர்க் குழாய்க்க்கான தொட்டி கிணறு மாதிரி ஆழமாக இருக்கும். கீழே இருந்து தண்ணீரைப் பிடித்து யாராவது கொடுத்தால் மேலே யாராவது நின்று வாங்க வேண்டும்,
நான்காவது வீடு ஒரு உதவி வணிக வரி அதிகாரியின் வீடு. அவர் வீட்டிற்க்கு போய்தான் ஆல் இந்திய ரேடியோ நியூஸ் கேட்போம்.
கர கர வென்று கேட்டாலும் சரோஜ் நாராயண சாமியின் குரல் இப்போதும் காதிலேயே ஒலிக்கிறது. அந்த அதிகாரியின் பெயர் நடேசன் என நினைக்கிறேன். அவரது மகன் முருகேசன் மதுரையில் படித்தார். தீபாவளிக்கு நிறைய வெடிகளைப் போடுவதை ஆதங்கத்தோடு வேடிக்கை பார்ப்போம்.
ஐந்தாவது இடம் கோகுலம் என்று போடப்பட்டிருக்கும். காலி இடம். முட்புதர் மண்டியிருக்கும். ஒரு தடவை பெரிய மண்ணுளிப்
பாம்பை பிடித்து எரித்தது நினைவில் இருக்கிறது.
எதிர்ப்பக்கத்தில் ஆதி ரங்கநாதர் கோயில் சின்னதாக இருக்கும். அதற்குப் பக்கத்தில் உள்ள பெரிய காலி இடத்தில் பெரிய விழா நடத்தி கவர்னர் கே கே ஷா ( கலைஞர் அரசை 1976 ல் டிஸ்மிஸ் செய்யப் பரிந்துரைத்தவர் ) அடிக்கல் நாட்டிய கட்டிடம் பின்னர் எழும்பவே இல்லை. அக் காலி இடம் வாயிலாகவே எனது நண்பன் வீட்டிற்க்கு குறுக்கு வழியில் ஓடிப் போவேன்.எனவே அக் கட்டிடம் வராததில் மகிழ்ச்சியே எனக்குள் இருந்தது.
எதிரே பால் பண்ணை. எனவே தண்ணீர் இல்லாத பால் கிடைக்கும். பின்னர் அரசியலில் பிரபலமான திரு தாமரைக்கனி அவர்களின் அம்மா அங்குதான் தனது மாட்டை பால் கறக்க கொண்டு வருவார். தாமரைக்கனி மிக மிக ஒல்லியாக அந்தத் தெருவில் அடிக்கடி நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.இவ்வளவு பக்கத்தில் இருந்த பால் பண்ணையில் பால் வாங்குவதற்கான கூப்பன் வாங்குவதற்கு 1 கி மீ க்கும் அதிகமாக நடந்து பஸ் ஸ்டாண்ட் தாண்டிச் செல்ல வேண்டும்.
பத்தாம் நம்பர் வீடு எனது நண்பன் சீனிவாசன் வீடு. அவனது அப்பா திரு கோபால்சாமி ( வக்கீல்) ஆவார். எங்கள் தெருவில் அவர் மட்டுமே ஸ்கூட்டர் வைத்திருந்தார்.அவர்கள் வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. இரண்டு பெரிய அசோகா மரங்கள், துளசி மாடம், தென்னை மரங்கள் எல்லாம் இருந்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் அவர்கள் வீட்டில்தான் தண்ணீர் இறைத்துக் கொள்வோம்.இராட்டினத்தில் தண்ணீர் இறைத்து முடிவதற்குள் கைகளில் தோல் உரிந்துவிடும். 31 குடங்கள் எடுத்தால்தான் எங்கள் வீட்டு டிரம், சிமின்ட் தொட்டி உட்பட பாத்திரங்கள் நிரம்பும். பெடல் போடுகிற பேபி கார் ஒன்று அவர்கள் வீட்டில் உண்டு. ஒன்னாவது வகுப்பு மட்டும் என்னோடு படித்த சீனிவாசன் பிறகு ஸ்கூல் மாறி கான்வென்ட் போன போது எனக்கு வருத்தமாக இருந்தது.புது பாசன் சட்டைகளை அவன் போடுவான். நியூஸ் பேப்பர் மாதிரி கொல்லாஜ் செய்த டிசைன் சட்டையை அவன் போட்டபோது அது மாதிரி வேண்டும் என்று அப்பாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் கிடைக்கவில்லை. திரு சீனிவாசன் விவசாயக் கல்லூரியில் படித்து தற்போது விவசாய அதிகாரியாக இருக்கிறான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவர்க்கு உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தான். நல்ல ஆங்கிலத்தில் இருந்தது அக் கடிதம். இவனது கொள்ளுத் தாத்தாதான் ராவன்னா கீனா அவர்கள்.
எங்கள் தெருவிலேயே சிவகிரி அரண்மனையின் ஒரு பக்கம் அமைந்திருக்கும்.எங்கள் அப்பா அதில்தான் வேலை பார்த்தார்.
அதில் மின்சார வாரிய ஆபீஸ் இருந்தது. மின் கட்டணம் காட்டுகிற பிரிவு எங்கள் தெருவில்தான் இருந்தது.
எங்கள் தெரு முக்கில் ஒரு திறந்த மண்டபம் ஒன்று இருந்தது. ஆனால் அது சிதிலமடைந்ததால் அகற்றப்பட்டது. சொக்கப் பனை எங்கள் தெருவிலேயே நடைபெறும். ஓங்கி உயர்ந்து எரிகிற தீயை இப்போது நினைத்தாலும் அதன் கதகதப்பை உணர முடிகிறது.வழுக்கு மரம், உறியடி எல்லாம் எங்கள் தெருவில்தான் நடைபெறும்.
விவரம் அறிந்த பின்னர் ஐந்தாறு ஆண்டுகளே அத்தெருவில் இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் இருந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

Friday, 29 October 2010
வழியனுப்பிய கோபுரம்

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனினும் திருவில்லிபுத்தூரின் கம்பீரமான கோபுரம் மனதிற்கு இன்றைக்கும் நெருக்கமானதாகவே உள்ளது. காரணம் 1976 வரை வாழ்ந்த ஊர் அது.
நான்காவது வரை படித்த நீராவி ஸ்கூல், தண்ணி இல்லாமல் பேட்மிண்டன் மைதானமாக மாறிப்போன சக்கரக் குளம், ஆண்டாள் கோவில் லாலா கடை. திருப்பாற்கடல் பிள்ளையார் கோயில், மடவார்வளாகம் சிவன் கோயில் குளம். சிவகிரி அரண்மனை, ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்த துளசி மாடம், ஒன்றரை மணி நேரத்தில் ரதவீதியை சுற்றி வந்துவிடும் செப்புத் தேர், 17 வருசமா ஓடாம இருந்த பெரிய தேர், பென்னிங்க்டன் நூலகம். மாடத் தெரு இந்து நடுநிலைப் பள்ளி, அபி மன்னன் பாத்திரக்கடை, நண்பனின் ஜோதி ஸ்டுடியோ, திருமுக்குளம், சி எம் எஸ் விளையாட்டு மைதானம். சின்ன அண்ணா மா. குருசாமி கல்லறை, சிவகாசி பஸ் நிற்கிற மாதா கோயில், வெங்கடேஸ்வரா தியேட்டர், பெரிய கண்மாய், மேலரத வீதியில் காமராஜர் திறந்து வைத்த ராவன்னா கீனா சிலை, உமையாள் விலாஸ் ஓட்டல், அப்போது ஊருக்கு வெளியே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜெய கிருஷ்ணா தியேட்டர், ஜெயராம் ட்ரான்ஸ்போர்ட், சிவப்புக் கலரில் ஓடிய
ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ், வீட்டுக்கு எதிரே இருந்த பால் பண்ணை, பஸ் ஸ்டாண்ட் முக்கில் இருக்கிற பாலசுப்ரமணியவிலாஸ், கோவிந்தம் பிள்ளை கடை, கீழரத வீதியில் அண்ணா படங்களோடு இருந்த சலூன், காய்ச்சலுக்கு மிக்சர் கொடுத்த கம்பௌண்டர் ஆதி, இந்து ஐ ஸ்கூல் முன்பு கீறி கீறிக் கிடைக்கிற கருப்பட்டி அச்சு மிட்டாய், பெரியார்- ராஜாஜி-எம் ஜி சக்ரபாணி- மதியழகன் பேசிய தேரடித் திடல், சுருண்டு சுருண்டு பிரம்மாண்டமாய் கீழரத வீதியில் கிடந்த கைக்குள் அடங்காத பெரிய தேர் வடம், நண்பர்கள் ரமேஷ் பாபு, சீனிவாசன், ராதா சங்கர், சங்கர், மகேஸ்வரன் ....இப்படி நினைவலைகள் அலை மோதுகின்றன.
அந்த ஊரை விட்டு 1976 ஜூன் மாதம் வெளியேறியபோது பஸ் எல்லையைத் தாண்டிய பிறகும் திரும்பிப் பார்த்தபோது தெரிந்தது இந்த கோபுரம்தான்.
Subscribe to:
Posts (Atom)