திருவில்லிபுத்தூரின் அன்றைய பிரபலமான ஓட்டல்களில் ஒன்று. வடக்கு ரத வீதியில் அமைந்திருந்த அது மாலை நேரம் நிரம்பி வழியும். அதை நடத்திய குடும்பத்துப் பையன் பேச்சியப்பன் எனது வகுப்பறைத் தோழன். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவனைத் தேடிச் சென்று தேரடி தெருவில் சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன்.
வடக்கு ரத வீதி உமையாள் விலாஸ் மூடப்பட்ட பின்னர் கீழ ரத வீதியில் சிறிது காலம் மின் வரியா அலுவலகத்திற்கு எதிரே இருந்தது. பின்னர் டெலிபோன் இணைப்பகத்தில் இருந்து வெங்கடேஸ்வரா தியேட்டர் செல்கிற தெருவின் இடது முனையில் இருந்தது.
அந்தக் காலத்தில் சுவையான உணவிற்கு பலரும் தேடிச் சென்ற ஓட்டல் அது.
நல்ல பதிவு.
ReplyDeleteதற்போது உமையாள் விலாஸ் இயங்கவில்லை. வடக்கு ரத வீதியே மிகவும் மாறி விட்டது. ஸ்ரீ வில்லிபுதுரின் அமைதி போய் விட்டது. மிகவும் பரபரப்பாகி விட்டது.
நன்றி.
சுவையான பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉங்களுக்கு மிகுதியான அலுவல்களிருப்பது அறிந்த விஷயமெனினும் இதிலும் கொஞ்சம் எழுதுங்கள்.
ReplyDeleteரொம்ப வேதனையான விஷயம் உமையாள் விலாஸ் இல்லாமல் போனது... கதிரவன் மெஸ் அதை ஈடுகட்டுகிறது போல...
ReplyDeleteமுந்தி அசைவ உணவுக்கு ஒரு புரோட்டாக்கடை நைன் ஸ்டார் என்ற பெயரில் இயங்கி வந்தது... ஆத்துக்குள்ள... அதுவும் இருந்த இடம் தெரியாமப் போச்சு...